Monday, April 11, 2011

மின்வெட்டு



மாலை
வேளைகளில்
நேரம்
கிடைக்கிறது
குடும்பத்தினருடன் பேச
தொலைக்காட்சி
பார்க்கமுடியாததால்

--

மின்சாரமற்ற முன் இரவில்!!!















மாலையில்
வீடு திரும்பும்
வேளையில்
மின்சார நிறத்தம்

தொலைக்காட்சி பார்க்க
முடியவில்லை

வானொலி கேட்க
முடியவில்லை

சார்ஜ் இல்லாததால்
சக அலுவலருடனோ
நண்பருடனோ பேச
முடியவில்லை

ஆக பொழுதைப்போக்க
பேசிக்கொண்டிருந்தேன்
என் குடும்பத்துடன்!!!

--

Sunday, April 10, 2011

தனிமை -1













*
வீட்டின் அருகே
விழந்த
மழைத்துளை
எண்ணிக்
கொண்டிருந்தேன்
உடன்
மற்ற
மழைத்துளிகள்!!!

--

*
யாருமற்ற
என் வீட்டில்
நான் மட்டும்
பயமாக இருந்தது
யாராவது
கலைத்துவிடுவார்களோ
என் தனிமையை!!!


--

*
வீட்டில்
நான் மட்டும்
பேசிக்கொண்டிருக்கிறேன்
என்
மௌனத்துடன்



---

Friday, April 8, 2011

அறிவிலி

ஆழமான
அறிவில்லாத
ஆத்திகன்
நாத்திகனாகிறான்
அவன் இழக்கும்
ஒவ்வொரு
உறவுகளின் போதும்..

Wednesday, April 6, 2011

நழுவிய செல்போன் : - (

குறிப்பு: சில்லென்று ஒரு காதல் படத்தில் நியுயார்க் நகரம் பாடல் மெட்டுடன் படிக்கவும்...


சென்னை நகரம், நகரும் நேரம்
செல்லும் நழுவியது, நீரில் விழுந்தது

சார்ஜூம் இறங்கியே செல்லும் உயிரை இழந்தது
நண்பர்கள் இல்லா அலுவலகத்தின் உள்ளே
நானும் சிம் கார்டும்,
தனிமை தனிமையோ..
கொடுமை கொடுமையோ..


(Man Repeat)
--
சென்னை நகரம், நகரும் நேரம்
செல்லும் நழுவியது, நீரில் விழுந்தது

சார்ஜூம் இறங்கியே செல்லும் உயிரை இழந்தது
நண்பர்கள் இல்லா அலுவலகத்தின் உள்ளே
நானும் சிம் கார்டும்,
தனிமை தனிமையோ..
கொடுமை கொடுமையோ..
--


விதவிதமாய் ரிங்டோன்ஸ் மூலம், என்னை மகிழ்விக்க
நீ இல்லை..

தினமும் ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஒரு மெஸேஜ் கொடுக்க
நீ இல்லை..

தினம் நிகழும் சம்பவங்களை ஒரு போட்டோ எடுக்க
நீ இங்கு இல்லை..

அவசியமான் நேரத்தில் ஒரு கால் பண்ண
நீ இங்கே இல்ல்ல்ல்லைய்ய்ய்ய.....

செல்லும் இல்லை, சார்ஜூம் இல்லை, இந்த நேரத்தில்
என் போன் பில் எல்லாமும் குறைந்ததென்ன மாயம்

செல் இங்கே, பேட்டரி எங்கே இந்த உவமைக்கு
நாம் இருவரும் இலக்கணம் ஆனதேனோஓஓஓஓ......


(choros - women)
--
சென்னை நகரம், நகரும் நேரம்
செல்லும் நழுவியது, நீரில் விழுந்தது
--


இன்பாக்ஸில் தினமும் சில மெஸேஜ் டைப் பண்ணும் என் கைகள்
தகவல் அனுப்பியதும் மெஸேஜ் செல்லும் வேகம் என்ன ஜெட்டா...

பார்க்க அழகாக செல் இருந்தும் இந்த தருணத்தில்
செல்லும் சிப்பும் வொர்க் ஆகாமல் போனதேனோ...

நான் சென்ற இடங்களில் நீயும் இருந்தால்
டவர் குறைந்த இடங்களில் கூட சிக்னல் கிடைக்குமே...


(choros - women)
--
சென்னை நகரம், நகரும் நேரம்
செல்லும் நழுவியது, நீரில் விழுந்தது

சார்ஜூம் இறங்கியே செல்லும் உயிரை இழந்தது
நண்பர்கள் இல்லா அலுவலகத்தின் உள்ளே
நானும் சிம் கார்டும்,
தனிமை தனிமையோ..
கொடுமை கொடுமையோ..
--

நந்தவனம்

வறண்ட
பாலைவனத்தில்

விழுந்தது
ஒரு
சிரிப்பூ

மலர்ந்தது
ந்
!!!

நீ நீயாக இரு

--

எப்போதும்
முழுமையான
சகிப்புத்தன்மையுடன்
இருந்து விடாதே

அவ்வப்போது
கோபப்படு
எரிச்சல்படு

கடந்தகாலத்தில்
சகிப்புத்தன்மையுடன்
இருந்ததின் பலன்
உன்னை
நல்லவனாக
எதிர்பார்க்கப்படும்

நினைப்பு

உனக்கு மிகப்பெரிய
சுமை!!!


--

தந்தை!!


ஒரு மௌன யுத்தம்
நிகழந்துகொண்டே இருக்கிறது
வயதான
மகனுக்கும்
தந்தைக்கும்

------


குடும்ப தலைவன்
பதவிக்கான
போட்டியில்
சில நேரங்களில்
மகன்
சர்வாதிகாரியகவே
மாறிவிடுகிறான்

தந்தை
நடத்தப்படுகிறார்
ஒரு முன்னாள்
சர்வாதிகாரியைப் போல்!!