Monday, March 14, 2011

சிந்தித்த போது சிந்தியவை -3

கடமை
-------
மற்றவர்கள்
தம்
கடமைகளிலிருந்து
தவறும் போது
இன்னும்
கவனமாகிறேன்
என்
கடமைகளில் !!!


குறை
----------
மற்றவர்களின்
குறைகளை
குறை சொல்லும்
தருணத்தில்
மறந்துவிடுகிறோம்
நம்முடைய
குறைகளையும்
மற்றும்
குறை சொல்வதும்
ஒரு குறை என்பதையும்!
சந்தர்ப்பம்
-------------------
சந்தர்ப்பம் அமையும்போது
தவறுகளை திருத்திக்கொள்ள
தவறினால்
மற்றொரு சந்தர்ப்பத்தில்
தவறுகளை
தவிர்க்க முடியாது!

தத்துவம்
----------------
தத்துவங்கள்
தவறாமல்
தரிசனம்
தருகிறது
தவறு
நடந்தபிறகு !

2 comments:

  1. செல்வன்

    அனைத்து கருத்தும் மிக அருமை இதை உண்ர்ந்தும் உணராதிருக்கையில் தான் நமக்கு பிரச்னையே என்ன செய்ய

    நன்றி செல்வன்

    ஜேகே

    ReplyDelete
  2. ஆமாம் ஜேகே அவர்களே... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete