Tuesday, March 29, 2011

முயற்சி

வெற்றியாளனுக்கும்
தோல்வியடைபவனுக்கும்
வித்தியாசம்
சிறிதளவே!

அதிக "சிறிதளவு முயற்சியில்"
சற்றே "அதிக உழைப்பில்"

கனவு காண்பவனுக்கு வெற்றி
அதிக கனவு கண்டவன்
என்பதில் மட்டுமே!

உழைத்தவனுக்கு
எத்தனை வெற்றி
என்பதில்!!!

Wednesday, March 23, 2011

விருந்து


சிறை நிரப்பும்
போராட்டம்
திருமண விருந்து!!!



 

போராட்டம்


 உள்ளிருப்பு
போராட்டம்
     தாழ்வு மனபான்மை!!


 

வரதட்சிணை


நீராவியை
வரதட்சிணையாகக் கேட்டு
மழையை
தாய்பூமிக்கு
அனுப்பியது
வானம்!

மனித மகன்கள்
இயற்கை வளங்களை
சுயநலத்திற்காக
சூதாடி அழித்ததால்
தர இயலாமல் பூமி!

சினத்தில்
மழையை
அனுப்புவதைக்
குறைத்துக்கொண்டது
வானம்!

இப்பிரச்சினை
தொடரும்
மகன்கள்
இயற்கைவளத்தை
பெருக்கும் வரை.!!!!

Tuesday, March 22, 2011

நோட்டம்

------------------


எந்தெந்த வீடு
பூட்டிருக்கிறது
என்று நோட்டம்

விட்டபடி

காவல்காரன்.

-----------------

காத்திருப்பு


-----
உன் மௌனம்
கலைவதற்காக
காத்திருக்கிறேன்

I.C.U.வின் வெளியே



-----

பொதுநலம்!!!


நலம்,
நலமறிய ஆவல்
என்றது
என் சுயநலம்
பொதுநலத்திடம்!


நீ நலமாக
இருக்கும் போது
நான் எப்படி
நலமாக இருப்பது
என்றது என் பொதுநலம்!!!

Monday, March 21, 2011

யுகம்

------------------
ஒவ்வொரு
நொடியும்
யுகமாகிறது
ஐ.சி.யு (I.C.U) வின் வெளியே !

Sunday, March 20, 2011

மின்சாரமற்ற நள்ளிரவில் - 2

மின்சாரம் தடைபட
மின்விசிறி நிற்கிறது
ஆரம்பமாகிறது
உறக்கமில்லா இரவு!

இதுவரை மின்விசிறியே
இல்லாமல் தினமும்
உறங்கிய எளிய
மனிதர்களை
நினைக்கையில்
தொடர்ந்தது
நிம்மதியான உறக்கம்!!

Friday, March 18, 2011

மின்சாரமற்ற நள்ளிரவில் - 1















1.
---------------------------------------
முதன் முறையாக
எப்படி பொழுதை போக்குவது
என்று சிந்திப்பதை
எனது  பொழுதை போக்காக்கினேன்!

உறக்கமற்ற
மற்றும்
மின்சாரமற்ற
முன் இரவில்!!!
---------------------------------------

2.

வானொலி,
தொலைக்காட்சி
இருந்தும்
முதன்முறையாக
மௌனத்தின்
சப்தம் கேட்கிறேன்.
மின்சாரமற்ற ஓர் நள்ளிரவில்.!

3.
பார்த்துப்போ என்றான்
கண் தெரியாத
அறை நண்பன்...!
மின்சாரமற்ற
நள்ளிரவில்..!

4.
மனிதர்களின்
உறக்கத்தை
கெடுப்பதுடன்
நோயையும்
கொடுப்பதால்
குற்ற உணர்ச்சியுடன்
உயிரை மாய்த்துக்கொள்கிறது
கொசு
ஒரே நாளில்!!!


5.
கொசுவை
அடித்தேன்

இரத்தம்.
என்னுடையதா
கொசுவுடையதா!!?


6.
பார்த்தாயா....... ?
கொளுத்தவில்லையா.......?

மறந்துவிட்டாயா.........?
பரவாயில்லையா........?
மறுநாள்
மலேரியா....


7.
நன்றியுறை
----------------
இந்த
நள்ளிரவு எண்ணங்கள்
உருவாகக் காரணமான
- மின்சாரம் நிறுத்திய மின்சாரத்துறை
- நிசப்தம் கலைத்த & கடித்த கொசுக்கள்
- மௌனம் உணர்த்திய செவிகள்
ஆகியோருக்கு
நன்றிகள்!!!


 

Monday, March 14, 2011

வாதங்கள் !

வாதங்கள்
வேண்டாத விவாதங்களாகும் போது
ஒரு தரப்பின் மௌனம்
முடிவை மட்டும்
தருவதில்லை
மற்றொரு தரப்பிற்கு
குற்ற உணர்ச்சியையும்
ஏற்படுத்திவிடுகிறது
அவர் பக்கம்
நியாமிருந்தும்!!!

எதிர்பார்ப்பு !

-------------------
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றும் போது
இன்னும்
சிரத்தை எடுக்கிறேன்
என் கடமைகளில்
எந்த எதிர்பார்ப்புமின்றி

வட்டியும் முதலுமாக
வந்தடைகிறது
கடமையின் பலனும்
இழந்த எதிர்பார்ப்புகளும்!!!

சிந்தித்த போது சிந்தியவை -3

கடமை
-------
மற்றவர்கள்
தம்
கடமைகளிலிருந்து
தவறும் போது
இன்னும்
கவனமாகிறேன்
என்
கடமைகளில் !!!


குறை
----------
மற்றவர்களின்
குறைகளை
குறை சொல்லும்
தருணத்தில்
மறந்துவிடுகிறோம்
நம்முடைய
குறைகளையும்
மற்றும்
குறை சொல்வதும்
ஒரு குறை என்பதையும்!
சந்தர்ப்பம்
-------------------
சந்தர்ப்பம் அமையும்போது
தவறுகளை திருத்திக்கொள்ள
தவறினால்
மற்றொரு சந்தர்ப்பத்தில்
தவறுகளை
தவிர்க்க முடியாது!

தத்துவம்
----------------
தத்துவங்கள்
தவறாமல்
தரிசனம்
தருகிறது
தவறு
நடந்தபிறகு !

சகிப்புத்தன்மை!

---------------------------
சில சமயம்
சகிப்புத்தன்மை
இல்லாததை
சகித்துக்கொள்ள
நேரிடுகிறது !

தயக்கம்!

---------------
தயக்கங்களை
தகர்க்க
முற்பட்ட போது
சிறிது

தயக்கமாகவே
இருக்கறது!


-செல்வன்

அடைமழை!


தொடர்ந்து அடைமழை!
மகிழ்ச்சியாக இருந்தது
நான் வசிக்கும் பகுதி
இடுப்பளவு மூழ்கும்வரை!

சிந்தித்த போது சிந்தியவை -II

சிந்தித்த போது சிந்தியவை -II
-------------------------------------------ஜென் தத்துவம்:
ஓருவன் இறக்கையில்
சந்தோஷப்படுங்கள் !
வேட்டுடனும்,
புன்னகையுடனும்
நடனம்
சவ ஊர்வலத்தில்!
--------------------------------------------------------
வாடிய மலர்
மீண்டும் மலர்வதர்க்காக
காத்திருக்கிறது
விதவை !
----------------------------

-  செல்வன்

சிந்தித்த போது சிந்தியவை - I

நொடிக்கு நொடி
உருமாறும்
பச்சோந்தி
மேகம் !

---------------------------------------
இயற்கை வரையும்
Modern Art
மேகங்கள் !

---------------------------------------
எழுதிய பிறகு மீண்டும் சிந்தித்த போது....

வான் வரையும்
நவீன ஓவியம்
மேகங்கள் !
----------------------------------------


- செல்வன்

என் எண்ணங்களுடன்....

என் எண்ணங்களுடன் ஓத்துபோகும் ஓரு எதிரி
(அ)
என் எண்ணங்களுடன் முரண்பாடும் ஓரு நண்பன்

என் கனவுகளுடன் ஓத்துபோகும் ஓரு எதிரி
(அ)
என் கனவுகளுடன் முரண்பாடும் ஓரு நண்பன்

என் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் ஓரு எதிரி
(அ)
என் சந்தேகங்களுக்கு முரண்பாடும் ஓரு நண்பன்


என் கவிதைகளுக்கு உற்சாகமஊட்டும் ஓரு எதிரி
(அ)
என் கவிதைகளுக்கு விமர்சனம் செய்யும் ஓரு நண்பன்

அல்லது

சற்றே என் இணைய தளத்தில், இளைப்பாறும் பார்வையாளன்
யாவருக்கும் என் வந்தனங்கள் !

நட்புடன்
-எதிரி